
பிரபுதேவாவின் 60வது படத்தில் பின்னணி பாடிய விஜய் சேதுபதி
பிரபுதேவா நடித்து வரும் 60வது படம் வுல்ப். சஸ்பென்ஸ் திகில் கதையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது. பிரபுதேவாவுடன் ராய் லட்சுமி, ரமேஷ் திலக், அஞ்சு கோபிகா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு பாடல் பின்னணி பாடி இருப்பதாகவும், அந்த பாடல் ஆகஸ்ட் 13ம் தேதி ஆன நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் படக்குழு ஒரு போஸ்டர் மூலம் அறிவித்திருக்கிறது. அந்த வகையில் இப்படம் மூலம் முதன்முறையாக பிரபுதேவா படத்தில் இணைந்திருக்கிறார் விஜய் சேதுபதி.