Jailer: ஜெயிலர் வெற்றிக்கு இது தான் காரணம்: ரஜினி சொன்ன ரகசியம்

Superstar Rajinikanth: தான் நடித்த ஜெயிலர் படத்தின் வெற்றிக்கான காரணத்தை தன் நண்பர்களிடம் கூறி சந்தோஷப்பட்டிருக்கிறார் ரஜினி.

​ஜெயிலர்​சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படம் ரிலீஸான நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. இந்தியா தவிர்த்து அமெரிக்காவிலும் ஜெயிலரை குடுடம்ப ஆடியன்ஸ் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் ஜெயிலர் வெற்றிக்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.Jailer Collection: நாலே நாளில் ரூ. 300 கோடி வசூலித்த ஜெயிலர்: இந்தியாவில் மட்டும்…

ஹிட்​சொல்லி அடித்த நெல்சன் ரஜினியின் பெரிய Hit​​ரஜினி​ஜெயிலர் ரிலீஸான நாளில் ரஜினி சென்னையில் இல்லை. ரிலீஸுக்கு முன்பே அவர் இமயமலைக்கு கிளம்பிவிட்டார். ஜெயிலர் ரிலீஸான நாள் ரிஷேகேஷில் இருந்த ரஜினிக்கு அமெரிக்காவில் இருந்து சென்போன் அழைப்பு வந்திருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் ரஜினிக்கு போன் செய்து ஜெயிலருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து தெரிவித்துள்ளனர்.

​Rajinikanth: விபூதி, குங்குமம், ருத்ராட்ச மாலை, சாந்தமே உருவாக ரஜினி: சூப்பர் ஸ்டாரின் இமயமலை ட்ரிப் வைரல் போட்டோ

​வெற்றிக்கு காரணம்​ஜெயிலர் படம் வெற்றி பெற்றிருப்பதற்கும், நான் இமயமலை பயணம் வந்ததற்கும் தொடர்பு உள்ளது. நான் எப்பொழுது இமயமலைக்கு வந்தாலும் தனி சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியால் தான் ஜெயிலர் படம் வெற்றி பெற்றிருக்கிறது என தன்னுடன் இருப்பவர்களிடம் சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.
​வரவேற்பு​ஜெயிலர் ரிலீஸ் நேரத்தில் இமயமலையில் இருப்பதால் தன்னை பார்த்தால் ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்று மாறுவேடத்தில் செல்ல முடிவு செய்தார் ரஜினி. பின்னர் அந்த முடிவை கைவிட்டு ரசிகர்கள் வந்தால் பேசிவிடலாம் என சென்றார். தியேட்டர்கள் இல்லாத இடங்களில் கூட ரஜினியை பார்த்ததும் ஜெயிலர், ஜெயிலர் என மக்கள் மகிழ்ச்சி கரகோஷமிட்டுள்ளனர். அதை பார்த்த ரஜினி நெகிழ்ந்துவிட்டாராம்.
​இமயமலை​21 ஆண்டு காலமாக இமயமலைக்கு சென்று வருகிறார் ரஜினிகாந்த். கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதால் ஆண்டுதோறும் இமயமலைக்கு செல்வதை நிறுத்தினார். சுமார் 4 ஆண்டுகள் கழித்து தற்போது இமயமலைக்கு சென்றிருக்கிறார். ஆகஸ்ட் 17ம் தேதி சென்னை திரும்புகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டு தேறிய பிறகு முதல் முறையாக மகள் ஐஸ்வர்யாவை துணைக்கு அழைத்துச் செல்லாமல் தனியாக சென்றிருக்கிறார்.

​தனியாக பயணம்​தன் ஒவ்வொரு பட வேலை முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி. உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகே அந்த வழக்கம் மாறியது. மகள் ஐஸ்வர்யா தன் லால் சலாம் படத்தில் பிசியாக இருப்பதால் இந்த முறை யார் துணையும் இல்லாமல் தனியாக சென்றிருக்கிறார். ஆனால் அவருடன் நண்பர்கள் இருப்பதால் குடும்பத்தார் நிம்மதி அடைந்துள்ளனர்.
​தலைவர் 170​ஜெயிலர் படம் குறித்து ரஜினிக்கு அவரின் நண்பர்கள் போன் மூலம் அப்டேட் கொடுத்து வருகிறார்களாம். எல்லாம் பாபாஜியின் கருணை என சந்தோஷப்படுகிறாராம் ரஜினி. ஊர் திரும்பிய பிறகு ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார். அதற்கான லுக் டெஸ்ட்டில் கலந்து கொண்டுவிட்டு தான் இமயமலைக்கு கிளம்பினார். இதற்கிடையே ஜெயிலர் 2 பாகம் வரும் என பேச்சு கிளம்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.