பொன்னும் பொருளும் அருளும் அனந்தநாராயணர் பஞ்ச நாராயணத் தலங்களில் திருக்கண்ணமங்கை திவ்விய தேசத்துக்கு அடுத்ததாக ஆவராணி எனப்படும் ஆபரணதாரி, வடக் காலத்தூர், தேவூர், கீழ்வேளூர் ஆகிய தலங்கள் அமைந்திருக்கின்றன. திருக்கண்ணமங்கையில் லோகநாத பெருமாளாகவும், ஆவராணியில் அனந்தநாராயண னாகவும், வடக்காலத்தூரில் வரத நாராயணனாகவும், தேவூரில் தேவ நாராயணனாகவும், கீழ்வேளூர் என்ற கீவளூரில் யாதவ நாராயண னாகவும் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். பஞ்ச நாராயணத் தலங்களில் ஆவராணி தலத்தில் மண்ணளந்து பின் விண்ணளந்த விஸ்வரூபியான மகாவிஷ்ணு, ஏழு தலைகளை உடைய […]
