ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருக்கின்றனர். அதற்காக நாகேஸ்வர ராவ் தனது காதலனிடம், “நீ பெண்ணாக மாறினால், சமூகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்” எனக் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், நண்பர்களில் யாராவது ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என்றபோது, நாகேஸ்வர ராவின் நண்பர் பெண்ணாக மாற ஒப்புக்கொண்டார். இதையடுத்து பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையும் செய்து கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், தற்போது, நாகேஸ்வர ராவ் பெண்ணாக மாறியவரை திருமணம் செய்ய மறுத்திருக்கிறார். காதலனுக்காக பெண்ணாக மாறியவர் அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல், கிருஷ்ணலங்கா காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, நாகேஸ்வர ராவை கைதுசெய்திருக்கிறது. மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
