ஏர்டெல் 5G சேவை இனி இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் கிடைக்கும்?! 22 டெலிகாம் வட்டாரங்களிலும் 5G சேவை அறிமுகம்!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் வளர்ந்து வரும் 5G தொழில்நுட்பத்தை போட்டி போட்டுகொண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பணியை செய்து வருகின்றன. இதற்காக பல்வேறு நகரங்களில் 5G சேவைக்கான தொழில்நுட்ப பணிகளை செய்து வருகின்றன. பல கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஏற்கனவே 5G சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும்ஏர்டெல் 5G

இந்தியாவில் உள்ள 22 டெலிகாம் வட்டாரங்களிலும் குறைந்தபட்ச 5G சேவை அறிமுகப்படுத்தும் செயல்பாட்டை ஏர்டெல் நிறுவனம் நிறைவு செய்துவிட்டதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமப்பகுதிகள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் ஏர்டெல் 5G சேவை கிடைக்கும். ஏர்டெல் சிம் பயன்படுத்தும் 5G மொபைல் பயன்படுத்தும் நபர்கள் இனி இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் ஏர்டெல் 5G சேவையை பயன்படுத்தி மகிழலாம்.

10 மில்லியன் யுனிக் வாடிக்கையாளர்கள்

இந்தியா முழுவதும் 5000 நகரங்களில் தற்போது ஏர்டெலின் 5G சேவை கிடைக்கிறது. செப்டம்பர் 2023க்குள் மீதமுள்ள கிராமப்புற பகுதிகளிலும் 5G சேவையை வழங்குவதற்கான இலக்கை நோக்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது ஏர்டெல். அது மட்டுமின்றி தற்போது வரை 10 மில்லியன் யுனிக் வாடிக்கையாளர்களை தாண்டி பதிவு செய்துள்ளது இந்நிறுவனம்.

வயர்லெஸ் இணைய சேவை

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஏர்டெல் Xtream AirFiber சேவையின் மூலம் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக பொறுத்தப்பட்ட வயர்லெஸ் இணைய சேவையை வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

இதற்கு வாடிக்கையாளர்கள், திருப்பி பெறக்கூடிய ஒருமுறை டெப்பாஸிட் தொகை 2500 மற்றும் திட்ட தொகை ரூபாய் 4,794 செலுத்தி 6 மாதங்களுக்கு 100 Mbps வேகத்தில் இணைய சேவையை அனுபவித்து கொள்ளலாம். இதில் wifi வழியாக 5G இணைய சேவை வழங்கப்படும். குறிப்பாக, Wi-Fi 6 டெக்னாலஜி மூலம் ஒரே நேரத்தில் 64 டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.