புதுடில்லி,:டில்லி மாநகரில் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த தண்டவாளங்களில் ‘லார்விசைடு’ கொசு முட்டை ஒழிப்பு மருந்து தெளிக்கும் டெர்மினேட்டர் ரயிலை, டில்லி மேயர் ஷெல்லி ஓபராய் நேற்று துவக்கி வைத்தார்.
தலைநகர் டில்லியில் இந்த ஆண்டு, இம்மாதம் முதல் வாரம் வரை கிட்டத்தட்ட 350 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கொசு உற்பத்தியைத் தடுக்கும் பணிகளை டில்லி மாநகராட்சி முடுக்கி விடப்பட்டன. மாநகர் முழுதும் குப்பையை அகற்றும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில்வே மற்றும் டில்லி மாநகராட்சி ஆகியவை இணைந்து,
டெர்மினேட்டர் ரயிலை இயக்குற்கிறது.
இந்த ரயில் வாயிலாக தண்டவாளங்களின் அனைத்துப் பகுதிகளிலும், லார்விசைடு என்ற கொசு முட்டை ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் ஆண்டு தோறும் மழைக் காலத்தில் இயக்கப்படுகிறது.
புதுடில்லி ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், கொசு முட்டை ஒழிப்பு டெர்மினேட்டர் சிறப்பு ரயிலை, மேயர் ஷெல்லி ஓபராய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement