சென்னை: தமிழ்நாட்டில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இது தொடர்பாக பதிவுத்துறை விளக்கமளித்துள்ளது. வழிகாட்டி மதிப்பு என்பது சொத்து ஒன்றின் உடமை, உரிமை மாற்றப்படும்போது, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச மதிப்பு ஆகும். இதன் அடிப்படையிலே சொத்தினை பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை அரசின் வழிகாட்டி மதிப்பை விட சொத்தின் விற்பனை மதிப்பு அதிகமாக இருந்தால், அதிகமான விற்பனை மதிப்பிலேயே சொத்தினை பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, 27 மார்ச் 2023 அன்று, சொத்து […]
