அண்ணாமலையை தெறிக்கவிட்ட மாணவன் ஃபயாஸ்தீன்.. "மதத்தை சொல்லி திட்டுறீங்க".. நீங்க நல்ல அரசியல்வாதியா?

சென்னை:
நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மாணவன் ஃபயாஸ்தீன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை டார்கெட் செய்து சரமாரியாக விமர்சித்துள்ளார்.. மேலும், நீட்டை எதிர்த்தால் மதத்தை சொல்லி திட்டுவீங்களா..? என்றும் ஆவேசமாக அவர் கேள்வியெழுப்பினார்.

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, இறந்து போன மாணவனின் இறுதிச்சடங்கின் போது அவரது நண்பனான ஃபயாஸ்தீன், நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தார். மேலும், நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய பாஜக அரசையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

அவரது பேச்சு சமூக வலைதளங்களில் தீயாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் தற்போது பாஜகவினர் மாணவன் ஃபயாஸ்தீனை குறிவைத்து சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதில் அவரது மதத்தை சார்ந்தும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே நேரடியாக மாணவன் ஃபயாஸ்தீனை விமர்சித்தார். ஃபயாஸ்தீன் ரூ. 25 லட்சம் லஞ்சம் கொடுத்து திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக மதிமுக சார்பிலான கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் மாணவன் ஃபயாஸ்தீன் பங்கேற்று பேசியதாவது:

நீட் தேர்வை பற்றி நான் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டேன். நீங்களும் மீடியாக்களில் அதை கேட்டிருப்பீர்கள். ஆனாலும் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஒரு மாணவன் மருத்துவம் படிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை ப்ளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் முடிவு செய்யாமல், ஒரே ஒரு சிங்கிள் பேப்பரான நீட் தேர்வு செய்யும் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீட் தேர்வு இருந்தால் இனி பணக்காரர்களின் வீட்டு பிள்ளைகளே மருத்துவர்கள் ஆக முடியும். இதை எல்லோரும் உணர வேண்டும்.

ஏழை வீட்டு மாணவனும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நீட்டுக்கு எதிராக நான் பேசினேன். ஆனால், கமெண்டில் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னை மதத்தை சொல்லி திட்டுகிறார்கள். இவன் முஸ்லிம் என்பதால் அப்படி பேசுகிறான் எனக் கூறுகின்றனர். ஏன்டா டேய்.. எல்லா மதமும் சேர்ந்தது தான்டா இந்தியா. உன் மதவாத அரசியலை வேறு எங்கேயாவது போய் பண்ணு. தமிழ்நாட்டுல பண்ணாத.. வேலைக்கே ஆவாது.

இன்னொருத்தன் என்னை திமுக காரன்னு சொல்றான். இந்த மேடையில் சொல்றேன். நாளைக்கே பாஜக நீட்டுக்கு எதிர்த்து போராடுதுன்னா நாங்க அங்க போய் நிற்போம். ஆனா அவனுங்க போராட மாட்டானுங்க. அண்ணாமலை நேற்று என்னை பார்த்து கமெண்ட் அடிச்சிருக்காரு. ஏற்கனவே நிறைய டாக்டர்ஸ் இருக்காங்க. இவன் ஏன் லட்சக்கணக்கில் ரூபாய் கொடுத்து இப்ப டாக்டர் ஆகணும்னு பேசிருக்காரு. நான் அவர்ட்ட கேக்குறேன். ஏற்கனவே இங்கே நிறைய நல்ல அரசியல்வாதிகள் இருக்காங்க. நீங்க ஏன் அரசியல்வாதி ஆகணும்னு வர்றீங்க. இவ்வாறு ஃபயாஸ்தீன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.