வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிழக்கு லடாக் பகுதியில் ராணுவம் மற்றும் சிவிலியன்கள் பயன்படுத்தும் வகையில் உலகின் மிக நீளமான சாலை, சுரங்கப்பாதை மற்றும் போர் விமானங்கள் இறங்கும் வகையிலான விமான தளத்தை அமைக்கும் பணியில் இந்தியா தீவிரமாக உள்ளது.
இது தொடர்பாக எல்லை சாலைகள் அமைப்பு(பிஆர்ஓ) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உம்லிங் லா பாஸ் பகுதியில் உலகின் மிக உயரமான சாலை அமைத்து படைத்த சாதனையை தற்போது முறியடிக்க உள்ளோம்.
உயரமான சாலை
கிழக்கு லடாக்கில் டெம்சாக் செக்டார் பகுதியில் உள்ள பக்சே- மிக் லா இடையே அமையும் சாலை, உலகின் மிக உயரமான சாலை என்ற புதிய சாதனையை படைக்கும்.
கடந்த 15ம் தேதி லிக்ரு , மிக் லா, மற்றும் புக்சேவை இணைக்கும் வகையில், 19,400 அடி உயரத்தில் சாலை அமைக்கும் பணியை பிஆர்ஓ துவக்கியது. எந்த சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டாலும், அப்போது ஆயுதப்படைகளை அந்த பகுதிக்கு அனுப்ப இந்த சாலை உதவும்.
சுரங்கப்பாதை
உலகின் உயரமான சுரங்கப்பாதையாக ‛சிலா சுரங்கப்பாதை அமைகிறது. இரு வழிப்பாதையாக அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் பிரதமர் மோடி இந்த பாதையை திறந்து வைக்க உள்ளார். உலகின் நீளமான சுரங்கப்பாதையாக இது இருக்கும்.
ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலியை, லடாக்கின் ஜன்ஸ்கர் வழியாக லே பகுதி வரை இணைக்கும் ஷின்கு லா சுரங்கப்பாதை அமைக்கும் பணியையும் பிஆர்ஓ துவக்க உள்ளது. இது உயரமான சுரங்கப்பாதை என்ற பெருமை பெறும்.
விமானப்படை தளம்
போர் விமானங்கள் வந்து செல்லும் வகையில் நயோமா விமான படை தளம் அமைகிறது. கிழக்கு லடாக்கின் 30 கி.மீ., தொலைவில் அமையும் இந்த விமான படை தளம் அமைக்கும் பணிகள் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement