
சூர்யாவிற்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்?
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இது சூர்யாவின் 43வது படமாக உருவாகிறது. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ஷங்கர் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.