தற்கொலை சாதாரண விஷயமா.. "உங்க வீட்ல நடந்தா இப்படி பேசுவீங்களா?" எல். முருகனை விளாசிய உதயநிதி

சென்னை:
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையான ஒன்று என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறிய நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர்

பேசியுள்ளார்.

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவன் விக்னேஷ்வரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு எதிரான குரல்களும் மீண்டும் எழும்ப தொடங்கி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, மத்திய அமைச்சர் எல். முருகனிடம் நீட் தேர்வு தற்கொலை குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அந்தக் காலம் முதலாகவே வாடிக்கையான ஒன்றுதான்” என பதிலளித்தார். மேலும், மாணவர்களின் தற்கொலைகளை நீட் தேர்வுடன் தொடர்புபடுத்தி அரசியலாக்கக் கூடாது எனவும் அவர் கூறினார்.

எல். முருகனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஆவேசமாக பேசினார். அவர் கூறுகையில், “பாஜக தலைவர் ஒருத்தர் சொல்றாரு. அவர் பெயர் சொல்ல விரும்பல. பல ஆண்டுகளாக பொதுத்தேர்வு ரிசல்ட் வரும் போது இதுபோல மாணவர்கள் தற்கொலை செய்வது சாதாரண விஷயம் தானே என கூலா சொல்லிருக்காரு. நான் கேக்குறேன்.. இப்போ செத்துப்போன மாணவர்கள் எல்லாம் பொதுத்தேர்வு எழுதுன மாணவர்களா?

அங்க ஒரு பொண்ணு செத்து போச்சே அனிதா.. அந்தப் பொண்ணு வாங்குன மார்க் தெரியுமா உங்களுக்கு? 1200-க்கு 1176. இவர்கள் எல்லாம் தற்கொலை செய்துகொண்டது நீட் தேர்வால தான். நான் தெரியாமல்தான் கேக்குறேன். உங்க வீட்டுல ஒரு குழந்தை இப்படி தற்கொலை செஞ்சா இப்படிதான் பேசுவீங்களா? இன்னொன்றும் சொல்றாரு. நீட் தேர்வுக்கு எதிராக இந்தப் போராட்டமே தேவையில்லையாம். நான் சொல்றேன். தமிழ்நாட்டுக்கு பாஜக என்ற கட்சியே தேவையற்றது. இதுதொடர்ந்து கொண்டே போனால் தமிழ்நாட்டில் அதிமுகவையும், பாஜகவையும் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்” என உதயநிதி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.