லடாக் சீனா இந்திய நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடி பொய் சொல்வதாக ராகுல் காந்தி கூறி உள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி லடாக்கில் உள்ளார். இன்று அவர் பாங்காங் டிசோ ஏரி அருகே வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். அப்போது ராகுல்காந்தி, ”பல புகார்கள் லடாக் மக்களிடம் இருந்து வந்தன. தங்களுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தில் அவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். அங்கு வேலையில்லா திண்டாட்டம் […]
