
சந்திரமுகி 2 படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சந்திரமுகி 2. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் திரைக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார்கள். மேலும், எம். எம். கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்தின் ஸ்வாகதாஞ்சலி என்ற முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான மோருணியே என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.