நெருங்கும் வடகிழக்கு பருவமழை… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய மின்வாரியம்!

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பருவமழைதமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் முக்கிய பருவமழை வடகிழக்கு பருவமழை. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் இந்த பருவமழை மூலம் தமிழகத்தின் பெரும்பாலான தண்ணீர் தேவை பூர்த்தியாகும். தற்போது வடமாநிலங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை பல மாநிலங்களை புரட்டி போட்டுள்ளது.தமிழக அரசுகணிக்க முடியாத அளவுக்கு திடீர் திடீரென கனமழை கொட்டி தீர்ப்பதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தமிழகத்திறகு அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
​​மழை நீர் கால்வாய்கள்இதற்காக கழிவு நீர் தூர்வாரும் பணி, நீர் நிலைகளை தூர் வாரும் பணி, மழை நீர் கால்வாய்களை சரிசெய்யும் பணி ஆகியவற்றை முடுக்கிவிட்டுள்ளது. பருவமழை தொடங்குவதற்குள் இந்த பணிகளை எல்லாம் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இதுதொடர்பான பணிகள் வேகமெடுத்துள்ளன.

ராஜேஷ் லக்கானிஇந்நிலையில் மின்சார வாரியமும் பருவமழையை முன்னிட்டு அதிரடி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின்சார வாரிய மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர்களுட ஆலோசனை நடத்தி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
​​பராமரிப்பு பணிகள்
அதன்படி, பருவமழை காலத்தில் மின்தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மின்சாதனங்களில் முழுவதுமாக பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த மின்கம்பிகள், மின் கம்பங்கள் ஆகியவற்றையும் சரி செய்ய வேண்டும் என்றும் மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடமாற்றம் எச்சரிக்கைஅடிக்கடி மின்தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அதிகாரிகளை செய்யும் நிலை நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தில் மின்சார கட்டணத்தின் மூலம் வருவாயை அதிகரிப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
​​மின்சாரம் திருட்டு
அதன்படி ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள மின் இணைப்புகளுக்கு வினியோகம் செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் திருடப்படுவதை தடுக்க மின்வாரிய ஊழியர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.