சென்னை: சென்னை அண்ணா சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ கொண்டாட்டம் காரணமாக, ராயப்பேட்டை, அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதுபோல ராயப்பேட்டை, ஜி.பி.,சாலையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வியாழக்கிழமைகளில் மைலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து […]
