ஸ்ரீநகர் காஷ்மீருக்குச் சென்றுள்ள சோனியா காந்தி ஸ்ரீநகர் ஏரியில் படகு சவாரி செய்துள்ளார். காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அங்கு கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். லடாக்கின் பாங்காங் ஏரி பகுதிக்குச் சென்றதோடு, லடாக்கில் பல்வேறு பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். ராகுல் காந்தி தனது லடாக் பயணம் முடிந்த பிறகு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சென்றார். நேற்று 2 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு ராகுல்காந்தி சென்றார். […]
