திருவண்ணாமலை: வரும் 30ந்தேதி பவுர்ணமி வருவதால், அன்றைய தினம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் எம்பெருமான் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலையை பவுர்ணமி நிலவில் சுற்றி வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவண்ணாமலையில் இன்றும் பல சித்தர்கள் சுயரூபம் மற்றும் அரூருபமாக வாழ்ந்து வருவதாக வரலாறு. அதனால் பக்தர்கள் மலையை […]
