இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் மேலும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் 7G ரெயின்போ காலனி. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். ஹீரோயின் மீதான ஹீரோவின் ஒரு தலை காதலை அழகாவும் ஆழமாகவும் படமாக்கி இருப்பார் இயக்குனர் செல்வராகவன்.
7G ரெயின்போ காலனி
முன்னதாக, இந்த படத்தின் கதாநாயகியாக ஜெனிலியாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர், ஆனால், அவர் நடிக்கவில்லை. பின், வடகறி படத்தில் நடித்த ஸ்வாதி ரெட்டி கதாநாயகியாக ஒப்பந்தமானார். ஆனால், அவரும் இந்த படத்திலிருந்து வெளியேறினார். இந்த படத்தின் கதாநாயகி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பார், எனவே சோனியா அகர்வாலை அணுகினார்கள் படக்குழுவினர். பின்னர் அவரை வைத்தே படம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது.
இயக்குனர் செல்வராகவன்
7G ரெயின்போ காலனி படம் வெளியாகி கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆகின. சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்திருந்தார். அந்த படத்திற்கான கதையை எழுதி வருவதாகவும் தெரிவித்தார். இந்த இரண்டாவது பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் கூறினார். அதனால், 7G ரெயின்போ காலனி 2ல் முதல் பாகத்தின் நடித்த ரவி கிருஷ்ணா தான் ஹீரோவாக நடிப்பார் எனவும் கூறி இருந்தார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நடிகை அதிதி ஷங்கர்
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.
முதல் பாகத்தில், ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்த சோனியா அகர்வால் கதாபாத்திரம் இறந்தது போல காட்டப்பட்டிருக்கும். எனவே, இரண்டாம் பாகத்தில் வேற நடிகையை தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர். அந்த வகையில், விருமன், மாவீரன் பட நாயகியான அதிதி ஷங்கரை நடிக்க வைக்க ஆர்வம் காட்டினாராம் இயக்குனர் செல்வராகவன். இந்நிலையில், கதாநாயகி யாரென இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இந்த படத்தின் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
போதுமா வேட்டை ? இல்ல இன்னும் தரட்டுமா ?? வேட்டையன் ரஜினி வசூல் வேட்டையன் ஆனா சரித்திரம் !!
முதல் பாகத்தை AM.ரத்னம் தனது ஸ்ரீ சூர்யா என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்தார். அதேபோல, இந்த இரண்டாவது பாகத்தையும் ஸ்ரீ சூர்யா என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என AM.ரத்னம் அவர்களின் மகன் ரத்னம் கிருஷ்ணா உறுதி படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.முன்னதாக, 2022ல் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கினார் இயக்குனர் செல்வராகவன்.
Guest Author : Radhika Nedunchezhian