ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள்: இன்று வெளியீடு| Apples iPhone 15 Series Models: Released Today

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இன்று வெளியிடப்பட உள்ளது.

இந்தியாவின் முதன்மை ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் செப். 12-ல் வெளியாகும் என கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி இன்று (செப். 12) ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வை குபெர்டினோவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்த உள்ளது. இந்நிகழ்வு இந்திய நேரப்படி செப். 12ம் தேதி இரவு 10:30 மணி மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்நிகழ்வில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவையும் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. அறிமுக தேதியன்று ஐபோன் 15 சீரிஸின் விலை குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.