புதுடில்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அழைத்து செல்ல வந்த விமானம், லண்டனுக்கு திருப்பி விடப்பட்டதால், அவர் நாடு திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2 மணி அளவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கிளம்பினார்.
‛ஜி- 20′ கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 8 ம் தேதி புதுடில்லி வந்தார். மாநாடு நிறைவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு மீண்டும் தன் நாட்டுக்கு புறப்பட்டார்.
எனினும், பிரதமர் ட்ரூடோ செல்ல இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
விமானத்தை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உடனடியாக முடியாததால் ட்ரூடோவின் பயணம் ரத்து செய்யப்பட்டது. எனவே, ட்ரூடோ புதுடில்லியில் தங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விமானத்தை சரி செய்யும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ட்ரூடோவை அழைத்து செல்ல ரோம் வழியாக மற்றொரு விமானம் டில்லி வந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த விமானம் லண்டனுக்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, பிரச்னைகள் சரி செய்யப்பட்டு, கனடா கிளம்பினார் ஜஸ்டின் ட்ரூடோ.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement