ஜனநாயகம் என்பது ஒரு வழிமுறை. அது ஒரு இலக்கும் கூட. சர்வதேச சமூகத்தின் முழு பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் எட்டப்பட வேண்டிய இலக்கு. தனிநபர்கள், பொதுச் சமூகம், அரசாங்கம் என அனைத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது. எங்கேயும், எப்போதும், எல்லோராலும் அனுபவிக்ககூடியதே ஜனநாயம் – இப்படித்தான் ஜனநாயகம் குறித்து ஐ.நா. தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.
ஐ.நா. பொதுச் சபை கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றியதனை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப் 15ஆம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனநாயகம், அமைதி, நீடித்த வளர்ச்சிக்கு ஊடக சுதந்திரத்தின் அவசியம் என்ற கருத்தாக்கத்துடன் கடைபிடிக்கப்படுகிறது.
ஜனநாயகம் என்றால் ஜனநாயகம் என்றால் நியாயமான நேர்மையான தேர்தலை சரியான இடைவெளியில் நடத்தி மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சி அமைய வழிவகை செய்தல். ஜனநாயகத்தில் அரசியல், பொது உரிமைகளுடன் வாக்களிக்கும் உரிமையும் முக்கியத்துவம் வாய்ந்தது. கருத்துச் சுதந்திரமும், அரசியல் கட்சிகளை உருவாக்கி, அரசியல் பழகும் உரிமையும் இதில் அடங்கும்.
அடுத்த தலைமுறைக்கு அதிகாரமளித்தல் என்ற மைய கருத்துடன் ஐ.நா., சார்பில் செப்.15ல் சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement