காஞ்சிபுரம்: அண்ணா 115வது பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணாவின் பிறந்த நாளான இன்று காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக, காஞ்சிபுரம் வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழிநெடுகவும் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள அண்ணா உருவ […]
