கோவிட்டை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நிபா வைரஸ்: மருத்துவர் எச்சரிக்கை| Nipah virus more damaging than covid: Doctor alert

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கோவிட் தொற்றை விட நிபா வைரஸ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குனர் ஜெனரலான டாக்டர் ராஜிவ் பாஹ்ல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிபா வைரஸ் தொடர்பாக ஐ.சி.எம்.ஆர்., இயக்குனர் ஜெனரலான டாக்டர் ராஜிவ் பாஹ்ல் கூறியதாவது: கோவிட் தொற்றில் 2 முதல் 3 சதவீத இறப்பு விகிதம் இருந்தது. ஆனால் நிபா வைரஸில் 40 முதல் 70 சதவீத இறப்பு விகிதம் இருக்கும். அந்த அளவிற்கு பாதிப்பின் வீரியம் அதிகம் இருக்கும். பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்தே அவர்களது தொடர்பில் இருந்தவர்களுக்கே இதுவரை இந்த வைரஸ் பரவியுள்ளது.

நிபா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றில் கோவிட் பாதிப்பின்போது நாம் செய்த கைகழுவுதல், மாஸ்க் அணிதல் போன்றவைகளை இப்போதும் தொடர்வது முதன்மையானது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். தனிமைப்படுத்துதல், பாதுகாப்பாய் இருத்தலும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.