கனடா வர்த்தகத்துறை அமைச்சரின் இந்திய பயணம் திடீர் ஒத்திவைப்பு| Canada Postpones Trade Mission To India With Tensions On Rise: Report

ஒட்டோவா: ஜி20 மாநாட்டின் போது கனடா பிரதமர் ட்ரூடோ விமானத்தில் கோளாறு ஏற்பட்ட காரணத்தால், நாடு திரும்புவதில் பிரச்னை ஏற்பட்டது. கனடா வர்த்தகத்துறை அமைச்சர் மெரியின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 51, ‘ஜி – 20’ மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 8ம் தேதி புதுடில்லி வந்தார். இதையடுத்து, விமானத்தில் கோளாறு ஏற்பட்ட காரணத்தால், நாடு திரும்ப முடியாமல், 48 மணி நேரமாக புதுடில்லியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தங்கியிருந்தார். இதற்கிடையே, கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள இந்திய துாதரகத்தை மூட வேண்டும் என்றும், துாதர் சஞ்சய் குமார் வர்மாவை திரும்ப பெற வேண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இரு நாட்டிற்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்த அடுத்த மாதம் கனடா வர்த்தகத்துறை அமைச்சர் மெரி நக் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஜி20 மாநாட்டின் போது கனடா பிரதமர் ட்ரூடோ விமானத்தில் கோளாறு ஏற்பட்ட காரணத்தால், நாடு திரும்புவதில் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் கனடா வர்த்தகத்துறை அமைச்சர் மெரியின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கனடா செய்தித் தொடர்பாளர் சாந்தி கோசென்டினோ கூறுகையில், நாங்கள் இந்தியாவிற்கு வரவிருக்கும் வர்த்தக பணியை ஒத்திவைக்கிறோம் என எந்த காரணமும் தெரிவிக்காமல் கூறினார்.

புறக்கணிப்பு

ஜி 20 உச்சிமாநாட்டின் போது பல உலகத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை புறக்கணித்தார். ஐந்து நாட்களுக்கு முன்பு ஒரு குறுகிய, முறைசாரா சந்திப்பை மட்டுமே அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.