கவுகாத்தி: நாட்டை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கு தங்கியிருக்க வீடில்லை என்ற நிலைமை அனைவருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வன்முறை சண்டையால் பீடிக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த தேசிய கால்பந்து வீரரின் சோகக் கதை இது. கடந்த வாரம் திம்புவில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளன SAFF 16 வயதுக்குட்பட்ட சாம்பியன் பட்டத்தை வென்ற அணியின் கேப்டன் Ngamgouhou Mate.
தெங்னௌபால் மாவட்டத்தைச் சேர்ந்த Ngamgouhou Mate, தனது வெற்றிக்கு பிறகு வீடு திரும்பியபோது, அவரது வீடு எரிந்து தரைமட்டமாகியிருந்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை கலவரங்களில் Ngamgouhou Mateவின் வீடு எரிக்கப்பட்டது. எனவே, அவர் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் அடைக்கலம் புக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையின் கோரமுகத்தை மீண்டும் உலகிற்கு பறைசாற்றியிருக்கிறது.
இளம் இந்திய U-16 கேப்டன், “தங்குவதற்கு வீடு இல்லை” என்றாலும், மணிப்பூரில் அமைதியை விரைவில் வரும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். வீடு போனாலும் பரவாயில்லை, தன்னை சுற்றியுள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக நிம்மதியை தெரிவித்தார்.
“என்னைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். மாநிலத்தில் நடைபெற்ற மாபெரும் வன்முறையால் மணிப்பூர் பாதிக்கப்பட்டுள்ளது, இப்போது நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்” என்று நக்ம்கோஹோ மேட் (Ngamgouhou Mate) செய்தியாளர்களிடம் கூறினார்.
Ngamgouhou Mate மற்றும் இந்திய அணியின் பிற பழங்குடியினர் நேற்று காங்போக்பியில் கௌரவிக்கப்பட்டனர், அங்கு அவர்கள் மணிப்பூரின் மற்ற பகுதிகளுக்கான செய்தியை தெரிவித்தார்.
“எங்கள் அணி வீரர்களை நேசிக்கிறோம். நாங்கள் நட்பாக இருக்கிறோம், ஒன்றாக கோப்பையை வென்றோம், நாங்கள் மணிப்பூரில் அமைதியை விரும்புகிறோம்,” என்று விளையாடும் இந்திய U-16 கால்பந்து அணியின் உறுப்பினர் Vumlenlal Hangshing கூறினார்.
23 பேர் கொண்ட இந்திய SAFF 16 அணியில் 15 பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 16 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி, SAFF 16 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
6 வயதுக்குட்பட்ட இந்திய அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் தொடக்கம் முதலே, ஆட்டத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் வெளிப்பட்டது. இறுதியில் இந்திய அணி வங்கதேச அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆனால், தற்போது அணியின் கேப்டனின் வீடு தரைமட்டமாகிய சோகமும் அதனால், அவர் முகாமில் தங்க நேர்ந்திருப்பதும் கால்பந்து ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரங்களில், பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஆசிட் வீச்சு போன்ற தாக்குதலுக்கும் உள்ளான பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு மணிப்பூர் மாநில அரசு ஒப்புதல் கொடுத்திருக்கிறது.