சென்னையில் மழை…9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!
சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம்போல செயல்படும் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறித்துள்ளார்.