சென்னை: திமுக ஆட்சி பதவி ஏற்ற இரண்டரை வருடத்தில் 34 ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். சென்னை அறநிலையத்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 15 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 பெண் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டு உள்ளது என்றவர், […]
