“First impression is the best impression” என்பதை அதிகம் கேட்டிருப்போம். மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், ஹோம் மேக்கர் என யாராக இருந்தாலும் தங்களை க்ரூம் செய்துகொள்வது அவசியம்.
செல்ஃப் க்ரூமிங் என்றால் அதில் ஆரோக்கியமும் பொதிந்தே இருக்கிறது. க்ரூம் செய்துகொள்ளும்போது சமூகம், ஆரோக்கியம் மற்றும் உளவியல் சார்ந்து பல நன்மைகள் ஏற்படுகின்றன.

ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் இதற்கு முக்கியப் பங்கு உள்ளது. மேலும் தன்னுடைய தோற்றம் கொடுக்கும் தன்னம்பிக்கை நேர்மறையான எண்ணம், உத்வேகம் ஆகியவை ஒருவரின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதோடு அவரை வெற்றியளராகவும் மாற்றுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
நம் அம்மா, பாட்டி எல்லாம் வீட்டிலேயே நேர்த்தியாக புடவை அணிந்து, மஞ்சள் பூசி குளித்து, தலை பிண்ணி, பூ வைத்திருப்பார்கள். இதுவும் செல்ஃப் க்ரூமிங்தான். கால ஓட்டத்துக்கு ஏற்றாற்போல் க்ரூமிங்கும் தன்னை தகவமைத்துக்கொண்டு மேக்கப், ஃபேஷியல், ஹேர் கலர் என மாற்றம் அடைந்துள்ளது.

அந்த வகையில், அவள் விகடன் மற்றும் Naturals இணைந்து ‘ஆடைத் தேர்வு முதல் மேக்கப் வரை என்ற செல்ஃப் க்ரூமிங் பயிலரங்கை வரும் வெள்ளிக்கிழமை (செப்.29) நடத்தவுள்ளது. நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடமியின் பயிற்சித் துறையின் தலைவரும் க்ரூமிங் எக்ஸ்பெர்டுமான சிவக்குமார் மற்றும் நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடெமியின் மாஸ்டர் டிரெயினரும் செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்டுமான ப்ரீத்தி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
க்ரூமிங் செய்துகொள்வதில் ஆடைத் தேர்வு, மேக்கப், தோற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த விளக்கமும் செயல்முறையும் நிகழ்ச்சியில் இடம்பெறும். போட்டியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் நேரடியாக பதில் அளிப்பார்கள்.

செப்டம்பர் 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.