சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக, வரும் 30ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை தர கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மறுத்து வருகிறது. இதுகுறித்து கூட்டணி கட்சியான திமுக அரசு, அம்மாநில அரசுடன் பேச தயங்கி மத்தியஅரசையும், நீதிமன்றத்தையும் நாடி தண்ணீரை திறந்துவிட […]
