மும்பை :இணையவழி தேடல் தளமான, ‘கூகுள்’ வாயிலாக, தற்கொலை செய்து கொள்வதற்கான சிறந்த வழியை தேடிய நபர் குறித்து, ‘இன்டர்போல்’ எனப்படும், சர்வதேச போலீசார் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை மும்பை போலீசார் மீட்டனர்.
மன அழுத்தம்ராஜஸ்தானைச் சேர்ந்த நபர், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள மல்வானி என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவரது தாய், குற்ற வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் இருந்து தாயை வெளியே கொண்டு வர முடியவில்லையே என்ற மன அழுத்தத்தில் அந்த நபர் இருந்துஉள்ளார்.
மேலும், ஆறு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல், தன் மொபைல் போனில், தற்கொலை செய்து கொள்வதற்கான சிறந்த வழி குறித்து, கூகுளில் அடிக்கடி தேடி வந்துள்ளார்.
தேடல் தளங்களை தொடர்ந்து கண்காணித்து வரும், ‘இன்டர்போல்’ எனப்படும், சர்வதேச போலீசாருக்கு இந்த விபரம் தெரியவந்தது. உடனே, இது குறித்து சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் போன் எண்ணுடன், மும்பை காவல் துறைக்கு இன்டர்போல் எச்சரிக்கை தகவல் அனுப்பியது.
மனநல ஆலோசனைஇதன்படி, அந்தநபரின் மொபைல் போன் வாயிலாக இருப்பிடத்தை கண்டுபிடித்த மும்பை கிரைம் பிரிவு போலீசார் அவரை மீட்டனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், ‘இன்டர்போல் எச்சரிக்கையை தொடர்ந்து, தற்கொலை எண்ணத்தில் இருந்த நபரை பத்திரமாக மீட்டோம். அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்
பட்டது’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement