காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 78 பேர் காயம் அடைந்தனர்.
ஆப்கனின் ஹெராட் மாகாணத்தை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரிக்டரில் 5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 என்ற அளவுகளில் பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள் உணரப்பட்டது.
இதனால், வீடுகள் மற்றும் கடைகளில் இருந்தவர்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 78 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கி உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement