அக்டோபர் 8-ம் தேதி (நாளை) கிரேட் இந்தியன் பெஸ்டிவல் தொடங்க உள்ளது. பல பல பொருட்களை ‘Add to cart’ கொடுத்துவிட்டு ‘எப்படா ஞாயிற்றுகிழமை ஆகும்…’ என்று காத்துக்கொண்டிருக்கிறீர்களா? ‘ஆம்’ என்பது உங்களது பதிலாக இருந்தால் எப்படி ஸ்மார்ட்டாக ஷாப்பிங் செய்யலாம் என்று பார்க்கலாம்…வாங்க…

எப்படி பொருள்களை தேர்ந்தெடுக்கலாம்?
‘நீ வர்ற வரைக்கும் வெச்சிருப்பாங்களா?’ என்ற சூரியின் டயலாக் போல் ‘இன்னுமா பொருள்களை தேர்ந்தெடுக்காம இருப்பாங்க’ என்று கேட்கிறீர்களா? புதியதாக பொருள்களை தேர்ந்தெடுப்பவர்கள் இந்த டிப்ஸின் படி தேர்ந்தெடுங்கள். ஏற்கனவே கார்ட்டில் வைத்திருப்பவர்கள் செக் செய்து கொள்ளுங்கள்.
பிராண்ட் மிக அவசியம்
நீங்கள் குறிப்பிட்ட ஒரு பிராண்டின் பொருளை வாங்க நினைத்திருப்பீர்கள். ஆனால் கார்ட்டில் போட்டு வைத்திருப்பதோ வேறு பிராண்டாக இருக்கலாம். ஒரு ஒரிஜினல் பிராண்டின் பெயரை சற்று மாற்றியும் அல்லது அந்த பிராண்டின் பொருள் போலவே அச்சு அசலாக ஏகப்பட்ட பொருட்கள் மார்க்கெட்டில் குவிந்து கிடக்கிறது. அதனால் பிராண்டை மிக மிக கவனமாக பாருங்கள்.
ரிவ்யூ, ரேட்டிங் முக்கியம் பிகிலு
எனக்கு பிடித்த அல்லது நினைத்த பிராண்டின் பெயர் தான் உள்ளது என்று கண்ணை மூடிக்கொண்டு வாங்காமல் ரிவ்யூ மற்றும் ரேட்டிங்கை கட்டாயம் படியுங்கள். ஒருவேளை உங்களது பிடித்த பிராண்டின் பொருள் சரியில்லாததாக இருக்கலாம். தேடி பார்க்கும்போது இன்னொரு பிராண்ட் பொருள் சிறப்பானதாக இருக்கலாம். அதனால் ரிவ்யூ மற்றும் ரேட்டிங் பார்த்து தேர்ந்தெடுப்பது அவசியம்.

இதை பாத்துட்டீங்களா?
நல்ல பிராண்ட் பொருள், பிடித்தும் இருக்கிறது, ரிவ்யூ மற்றும் ரேட்டிங்கும் நன்றாக இருக்கிறது என்று இல்லாமல் உங்களுக்கு தேவையானது அந்த பொருளில் இருக்கிறதா என்பதை பாருங்கள். உதாரணமாக ஒரு பேக் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு ஏகப்பட்ட அறைகள் கொண்ட பேக் தேவையானதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேக்கில் ஒரே ஒரு அறைக்கூட இருக்கலாம். அதனால் புகைப்படம், வீடியோ, features ஆகியவற்றை நன்றாக பார்த்து, படித்து தேர்ந்தெடுங்கள்.
செக் பண்ணிடுங்க!
என்ன தான் பார்த்து பார்த்து ஆர்டர் செய்தாலும் டெலிவரி ஆகும் பொருளில் ஏதாவது சிக்கல் இருக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் ஒரு பொருளை ஆர்டர் போடும்போதே அதன் வராண்டி மற்றும் ரிட்டன் பாலிசியை (Return Policy) தெரிந்துக்கொள்வது அவசியம்.
கட்டாயம் கவனிக்க வேண்டியவை
ஒரு பொருளை கார்ட்டில் போட்டு வைத்து சில நாட்கள் அல்லது சில மாதங்கள் ஆகியிருக்கலாம். இடையில் அந்த பொருளை வேறு எங்காவது கூட வாங்கியிருக்க கூடும். அதனால் ஆர்டர் போடுவதற்கு முன்பு மற்றும் பேமெண்ட் செய்வதற்கு முன்பும் ஒருமுறை கட்டாயம் கார்ட்டை செக் செய்துவிடுங்கள்.
‘பார்த்தேன் நல்லா இருந்தது…’, ‘சும்மா வாங்கி வைப்போம்’ என்று இல்லாமல் தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். ‘இந்த பொருள் இரண்டு மாசத்துக்கு அப்புறம் தான் தேவை… இருந்தாலும் வாங்கி வெச்சுப்போம்’ என்றும் வாங்காதீர்கள். இந்த இரண்டு மாதங்களுக்கு இடையில் இதே மாதிரியான வேறொரு நல்ல பொருளை பார்க்கக்கூடும். சில நேரங்களில் இந்த பொருளே இன்னும் நல்ல விதமாக அப்கிரேட் ஆகலாம். இல்லை… இதைவிட நல்ல ஆஃபருக்கு கூட இந்த பொருள் கிடைக்கலாம். அதனால் ஸ்டாக் செய்து வைப்பதை சற்று குறைக்கலாம்.

இப்படியும் பணத்தை குறைக்கலாம்!
‘அது தான் ஆஃபர் இருக்கே’ என்று ஏகப்பட்ட பொருட்களை வாங்குவது அல்லது ஒரே பொருளை ஏகப்பட்டதாக வாங்குவது என்று இருக்காதீர்கள். உதாரணமாக உடைகளை கூறலாம். ஆஃபர் இருக்கு என்று அடுத்த தீபாவளிக்கு வரை உடை வாங்கிவிடுவோம். பழைய பாயிண்ட் தான்…இருந்தாலும் நோட் பண்ணிக்கோங்க… இந்த பாஸ்ட் புட் காலத்தில் தினம் தினம் எல்லாமும் அப்கிரேட் ஆகிறது. அதனால் நீங்கள் இன்று வாங்கும் ஆடை அடுத்த மாதமே ‘ஓல்ட் பேஷன்’ ஆகிவிடலாம்… பற்றாமல் கூட போய்விடலாம். அதனால் தேவையான அளவு மட்டுமே வாங்குங்கள்.
மிகப்பெரிய பிராண்டின் ஒரு பொருளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பீர்கள். ஆனால் அந்த பொருளுக்கும், அதற்கடுத்த இடத்தில் இருக்கும் பிராண்டின் பொருளுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது. அதனால் புத்திசாலிதனமாக இரண்டாம் இடத்தில் இருக்கும் பிராண்டை தேர்ந்தெடுக்கும்போது பணமும் குறையும்… அந்த பணத்தில் வேறு ஏதாவது பொருளை கூட வாங்கலாம்.
‘ஒரு ஆஃபரில் வாங்க நினைத்தது குத்தமா? அதுக்கு இவ்வளவு கண்டிஷனா?’ என்று நினைக்காதீர்கள். ஆஃபரில் ஒரு பொருளை வாங்கினாலும் அது உங்கள் உழைப்பில் வந்த காசு என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால் பார்த்து செலவழியுங்கள். ஹேப்பி ஷாப்பிங் மக்களே!