ஒட்டாவா: கனடாவில் நடந்த விமான விபத்தில், அதில் பயிற்சி விமானியாக செயல்பட்ட மும்பையை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த அபய் கட்ரு(25) மற்றும் யாஷ் ராமுகடே ஆகியோர் கனடா சென்று பைலட் ஆக பயிற்சி பெற்று வருகின்றனர். இன்று அவர்கள், இரட்டை இன்ஜீன் கொண்ட சிறிய விமானத்தை இயக்கினர். வான்கூவர் அருகேயுள்ள சில்லிவாக் என்ற இடத்தில் இந்த விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில், அபய் கட்ரு, யாஷ் ராமுகடே உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement