வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: ஆசிரியரை எப்படி சுட்டோம் என பெருமை பேசிய மாணவர்களை 24 மணி நேரத்திற்குள் தட்டி தூக்கியது உ.பி., போலீஸ்
உ.பி., மாநிலம் கந்தவுலி போலீஸ் ஸ்டேஷனிற்கு உட்பட்ட பகுதியான மாலுப்பூரில் பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் சுமித்குமார் சிங் என்பவர் மாணவர்களுக்கு பயிற்றுவித்து வந்தார். ஆசிரியரின் சகோதரருக்கும் பயிற்சி மையத்தில் படித்த வந்த மாணவர்களுக்கும் முன் விரோதம் இருந்துவந்தாக கூறப்படுகிறது.
ஆசிரியரின் சகோதரரை மிரட்டும் வகையில் மாணவர்கள் இருவர் பாடம் கற்று தரும் ஆசிரியரை சுடுவது என முடிவு செய்தனர். அதன் படி கடந்த 5 ம் தேதி பயிற்சி மையத்திற்கு வெளியே வைத்து குறிப்பிட்ட இரு மாணவர்கள் ஆசிரியரின் காலில் துப்பாக்கியால் சுட்டனர்.
தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியரை சுட்டது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுதங்களை குண்டர்கள் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துள்ளனர். அதில் ஆசிரியரை சுடுவதற்கு ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் நாங்கள் திரும்பிவருவோம். அவரை 40 முறை சுட வேண்டும். தற்போது ஒன்று போக மீதம் 39 எஞ்சி உள்ளன என கொக்கரித்துள்ளனர்.
இந்தவீடியோ வைரலானதை அடுத்து ஆக்ரா சரக போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாணவர்களை தட்டி தூக்கினர். மாணவர்கள் மீது இந்திய தண்டனை சட்டபிரிவு 307(கொலை முயற்சி) மற்றும் 506 ( குற்றவியல் மிரட்டல் ) ஆகியவற்றின் கீ்ழ் வழக்கு பதிவு செய்தனர். முன்னதாக காயம்அடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement