ஐதராபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 322 ரன்கள் குவித்தது.
உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 13வது சீசன் இந்தியாவில் நடக்கிறது. ஐதராபாத்தில் இன்று (அக்.,9) நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் கான்வே, வில் யங் ஜோடி துவக்கம் தந்தது. கான்வே 32 ரன்கள், யங் 70 ரன்கள் சேர்த்து நல்ல துவக்கம் தந்தனர்.
அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா (51), டேரில் மிட்சல் (48), கேப்டன் டாம் லதாம் (53) ஆகியோர் தங்களது பங்களிப்பை அளித்து வெளியேறினர். பிளிப்ஸ் (4), மார்க் சப்மேன் (5) சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இறுதிக்கட்டத்தில் சான்ட்னர் (36), ஹென்றி (10) அதிரடியில் அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது.
323 ரன்கள் என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement