India vs Afghanistan Match Update: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது உலகக் கோப்பை போட்டியில் சுப்மான் கில் விளையாடமாட்டார் என அறிவிப்பு. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியுடன் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் டெல்லிக்கு செல்லமாட்டார் என்றும் அவர் மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் சென்னையில் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை 2023 தொடரின் இரண்டாவது ஆட்டம் டெல்லியில் அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மான் கில் விளையாடலாம். சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடாதா சுப்மான் கில்
உலகக் கோப்பை முதல் போட்டியில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுப்மான் கில் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில்லுக்குப் பதிலாக இஷான் கிஷான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் டக் அவுட் ஆனார்.
Medical Update: Shubman Gill
More Details #TeamIndia | #CWC23 | #MeninBluehttps://t.co/qbzHChSMnm
— BCCI (@BCCI) October 9, 2023
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ள சுப்மான் கில்
முதல் போட்டிக்காக சென்னை வந்த பிறகு சுப்மானுக்கு கடும் காய்ச்சல் இருந்ததாக 3 நாட்களுக்கு முன்பு பிசிசிஐ தெரிவித்தது. அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
2023-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் கில்
இந்த ஆண்டு சிறப்பான ஃபார்மில் சுப்மான் கில் உள்ளார். 2023-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் ஆவார். 2023 ஆம் ஆண்டில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி 20 ஒருநாள் போட்டிகளில் 72.35 சராசரியிலும் 105.03 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 1,230 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அடித்த 6 ஒருநாள் சதங்களில் 5 இந்த வருடத்தில் அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கக்து.
உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் ஆட்டம்
மோதும் அணி
இடம்
நாள்
ஆஸ்திரேலியா
சென்னை
அக்டோபர் 8
ஆப்கானிஸ்தான்
டெல்லி
அக்டோபர் 11
பாகிஸ்தான்
அகமதாபாத்
அக்டோபர் 14
பங்களாதேஷ்
புனே
அக்டோபர் 19
நியூசிலாந்து
தர்மசாலா
அக்டோபர் 22
இங்கிலாந்து
லக்னோ
அக்டோபர் 29
இலங்கை
மும்பை
நவம்பர் 2
தென் ஆப்ரிக்கா
கொல்கத்தா
நவம்பர் 5
நெதர்லாந்து
பெங்களூரு
நவம்பர் 12