பெரோஸ்பூர் : நம் நாட்டு எல்லைக்குள் கவனக்குறைவாக நுழைய முயன்ற பாகிஸ்தான் நபரை, எல்லை பாதுகாப்புப் படையினர் பிடித்து, அந்நாட்டு ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காஜினி வாலா கிராமம், நம் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை ஒட்டி அமைந்துள்ளது.
இக்கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள சர்வதேச எல்லைக் கோட்டை கடந்து, நேற்று அத்துமீறி நம் நாட்டு எல்லைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைய முயன்றார்.
அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவரை தடுத்து நிறுத்தி, அவரது உடைமைகளை சோதனையிட்டனர்.
தடைசெய்யப்பட்ட எந்தப் பொருட்களும் இல்லாத நிலையில், அந்நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அவர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எனவும், கவனக்குறைவாக நம் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவரை, மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்திடம், நம் படையினர் ஒப்படைத்தனர்.
எல்லைக்குள் நுழைய முயன்ற அந்த நபரால், சிறிது நேரம் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement