சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது லியோ மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபேமிலி பாடலாக ரொம்பவே எமோஷனலாக உருவாகியுள்ள இது விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. முதல் இரண்டு பாடல்களில் அதிரடி காட்டிய லியோ டீம், மூன்றவது சிங்கிளை மெலடியாக கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
