வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்திய தாக்குதலில் 4 ஐ.நா. ஊழியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலின் காசா பகுதியை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2007ல் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது, 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தினர். இதையடுத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் மீதான போரை இஸ்ரேல் அரசு அறிவித்தது.
இன்றும் தொடர்ந்து நடந்த மோதல்களில், இஸ்ரேலில் 1200 க்கும் மேற்பட்டோரும், காசா பகுதியில் 900க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று காசா பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஐ.நா. நிவாரண முகாம் சேதமடைந்தது. இதில் 9 ஐ.நா. ஊழியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் 14 ஐ.நா. நிவாரண முகாம்கள் உள்ளன. இதில் ஒரு முகாம் மீது இன்று தாக்குதல் நடந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement