தேசிய கீதத்தை தமிழில் இசைக்காதது நெருடலாக இருந்தது யாழில் அமைச்சர் டக்ளஸ்
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்றைய சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்காதது என்னுள் பாரிய நேருடலையே ஏற்படுத்தியது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் தமிழர் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்று கூறும் நாம் அதனை சரியாக பயன்படுத்தாது இருப்பது மனவேதனை தரும் விடயமாக இருப்பதாக தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலர் இனவாதம் பேசலாம், இனவாதிகளாகவும் இருக்கலாம் அவைகள் அரசாங்கத்தின் கொள்கையோ அல்லது அமைச்சரவையின் கொள்கையாகவோ இருக்க முடியாது என்பதை தெரிவிக்கும் அதோவேளை வடபகுதியில் இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழிலேயே இசைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கூறியிருந்தார் .
தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் பயிற்சிகளை முடித்துக்கொண்ட பயிலுணர்களுக்கு சாவகச்சேரி பொதுநோக்கு மண்டபத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.