வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்துார்: மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், அம்மாநிலத்திலுள்ள பிரபல உணவகம், காலை 9:00 மணிக்குள் ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு இலவசமாக நொறுக்குத்தீனிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 230 சட்டசபை தொகுதிகளை உடைய இங்கு, வரும் நவ., 17ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுகள், டிச., 3ல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், இந்துார் மாவட்டத்தில் உள்ள, பிரபல ’56 டுகான்’ என்ற உணவகம், ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், காலை 9:00 மணிக்குள் ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு, தங்களது உணவகங்களில் இலவசமாக நொறுக்குத்தீனிகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் கூறியதாவது:
துாய்மையான நகரங்கள் பட்டியலில், முதலிடத்தில் இந்துார் உள்ளது. இதுபோன்று ஓட்டுப்பதிவு சதவீதத்திலும் முதலிடத்தில் இருக்க விரும்புகிறோம்.
அதன்படி, வரும் சட்டசபை தேர்தலில், காலை 9:00 மணிக்குள் ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு, எங்களது கடைகளில் இலவசமாக ஜிலேபி, போஹா ஆகியவை வழங்கப்படும்.
ஓட்டளித்ததற்கான சான்றாக, கையில் மை வைத்ததை வாக்காளர்கள் காட்ட வேண்டும். 9:00 மணிக்கு பின் வருவோருக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement