விஜயவாடா: ஊழல் வழக்கில் சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சிதலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்தது.
ஆந்திர திறன் மேம்பாட்டு கழகத்தில், ரூ.300 கோடி ஊழல் நடந்ததாக, அம்மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வயது முதுமை காரணமாகவும், 40 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததால், உடல்நலம் கருதி ஜாமினில் விட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் அனிருதா போஸ், பிலி எம்.திரிவேதி, ஜாமின் வழங்க மறுத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement