பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாதிகள் நிபந்தனை!| Israel Hamas War: Hamas ready to release all hostages if Israel stops bombing Gaza: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காசா: காசா மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதலை நிறுத்தினால், பிணைக்கைதிகளை விடுவிக்க தயாராக உள்ளதாக ஹமாஸ் பயங்கரவாதிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் 12வது நாளாக இன்றும் (அக்.,18) தொடர்கிறது. இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1,400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் காசா பகுதியில் 2,778 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டடுள்ளனர்.

முன்னதாக, இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய பிணைக்கைதிகள் வெளிநாட்டினர் மற்றும் இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் அரசு வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், பிணைக்கைதிகளை விடுவிக்க முன்வந்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், காசா பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை நிறுத்தினால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பிணைக்கைதிகளை விடுவிப்போம் எனக்கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.