வருடாநதம் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் ஒக்டோபர் 17ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை
முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு (17) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஜெயவிமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் வழங்கப்பட்டன.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சீ.புவனேந்திரன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில், மாவட்ட பதில் கணக்காளர் எஸ்.எம் .பசீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு இவ்வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர், மாவட்ட சமூக அபிவிருத்தி முகாமையாளர், எனப் பலர் பங்கேற்றனர்.