‛பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் குடும்பத்துடன் கொலை: அமெரிக்காவில் சீக்கிய மேயருக்கு மிரட்டல்| If You Dont Resign…: Sikh Mayor In US Receives Death Threats

லண்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஹோபோகென் நகர மேயராக இருக்கும் சீக்கிய மதத்தை சேர்ந்த மேயர் ரவிந்தர் எஸ் பல்லா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவரையும், குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.

ஹோபோகென் நகர மேயராக 2017ல் ரவிந்தர் எஸ் பல்லா வெற்றி பெற்றார். இதனால், அந்த நகரின் முதல் சீக்கிய மேயர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. 2021 தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார். கடந்த 2019ல் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

இது தொடர்பாக ரவிந்தர் எஸ் பல்லா கூறியதாவது: இமெயில் மூலம் மிரட்டல் வருகிறது. முதலில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறினர். பிறகு, என்னையும், குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக கூறினர். 3வதாக வந்த இமெயிலில், இது தான் கடைசி எச்சரிக்கை, உடனடியாக பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், உங்களையும், குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு மிரட்டலில் கொலை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என மிரட்டல் விடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.