சென்னை: விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ, நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் 140 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் படங்களின் முதல் நாள் கலெக்ஷனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
