ஜெய்ப்பூர் நேற்று காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அடுத்த மாதம் (நவம்பர்) 25 ஆம் தேதி 200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆளும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்று இந்த தேர்தலுக்கான, 33 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. பட்டியலில் முதல்வர் […]
