வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தர்மசாலா: நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணிக்கு 274 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தர்மசாலாவில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, ஷர்துலுக்குப் பதில் சூர்யகுமார், ஷமி இடம்பெற்றனர்.
ஷமி அசத்தல்
நியூசிலாந்து அணிக்கு கான்வே, வில் யங் ஜோடி துவக்கம் தந்தது. சிராஜ் ‘வேகத்தில்’ கான்வே டக் அவுட்டானார். நடப்பு உலக கோப்பையில் தனது முதல் ஓவரை வீசினார் ஷமி. இவரது ‘வேகத்தில்’ யங் (17) ஆட்டமிழந்தார். பின், இணைந்த ரச்சின் ரவிந்திரா, டேரில் மிட்செல் சிறப்பாக செயல்பட்டனர். இருவரும் அரை சதம் கடந்தனர். 3வது விக்கெட்டுக்கு 159 ரன் சேர்த்தபோது, ஷமி பந்துவீச்சில் ரச்சின் (75) அவுட்டானார்.
டேரில் மிட்செல் சதம் விளாசினார். குல்தீப் ‘சுழலில்’ லதாம் (5), பிலிப்ஸ் (23) சிக்கினர். ஷமியின் ஒரே ஓவரில் சான்ட்னர் (1), ஹென்றி (0) அவுட்டாகினர். மிட்செல் 130 ரன்னில் (9 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 273 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஷமி 5 விக்கெட் கைப்பற்றினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement