CNG இல் இயங்கும் பைக்… பஜாஜ் நிறுவனத்தின் மிரட்டல் திட்டம் – முழு விவரம்!

Bajaj CNG Bike: பல்சர் மற்றும் சேடக் போன்ற அறிமுகப்படுத்தி இந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ தனது சொந்த இடத்தை உருவாக்கி உள்ளது. அந்த வகையில், சிஎன்ஜி கேஸ் மூலம் இயங்கும் பைக்கை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த வகை பைக்குகளின் வருகையால், நாட்டு மக்களுக்கு பல்வேறு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் மக்களின் எரிபொருள் செலவும் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெயர் என்ன?

பஜாஜ் நிறுவனத்தின் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் பைக்கிற்கு புரூசர் இ101 (Bruzer E101) என்ற குறியீட்டுப் பெயர் உள்ளது. இது 110cc எஞ்சினுடன் வர உள்ளது. அதாவது பிளாடினா மாடலில் இந்த தயாரிப்பு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பைக்கின் முன்மாதிரி தயாராகி அதன் சோதனையும் தொடங்கி உள்ளது. 

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராகேஷ் சர்மா சமீபத்தில் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளில், இறக்குமதி கட்டணத்தை குறைப்பது, நாட்டில் மாசுபாட்டைக் குறைப்பது ஆகிய இரட்டை சவால்களை நிறுவனம் கையாள்கிறது. தற்போது இந்நிறுவனம் மூன்று சக்கர வாகனப் பிரிவில் 90 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

1 லட்சம் பைக்குகள் தயாரிப்பு?

இரு சக்கர வாகனப் பிரிவிலும் எங்களது ஆதிக்கத்தை வலுப்படுத்த விரும்புகிறோம். இதற்காக CNG இயங்கும் வாகனங்களை எங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்க்க தயாராகி வருகிறோம்” என்றார். இதன்மூலம், சிஎன்ஜியில் இயங்கும் பஜாஜ் பைக்குகள் வரும் மாதங்களில் வெளியிடப்படலாம் என்பதை இது குறிக்கிறது.

சிஎன்ஜியில் இயங்கும் 1 முதல் 1.2 லட்சம் பைக்குகளை தயாரிக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக வெளியான மேலும் தெரிவிக்கிறது. இருப்பினும், சிஎன்ஜி பைக்கின் வெளியீடு, விலை அல்லது அம்சங்கள் குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. பஜாஜ் நிறுவனத்தின் அதன் பெரும் தயாரிப்பான பல்சர் பைக்கின் NS400 மாடல் வெளியீட்டை வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர். இதுவரை அந்த பைக் எப்போது அறிமுகமாகும் என தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

நீடிக்காத முன்னோடி திட்டம்  

உங்கள் தகவலுக்கு, இந்திய அரசு 2016ஆம் ஆண்டில் CNG இல் இயங்கும் பைக்கின் முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் போது, பல உணவு விநியோக நிறுவனங்கள் இந்த CNG இல் இயங்கும் ஆக்டிவா பைக்கை பயன்படுத்தின. இருப்பினும், திட்டம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இப்போது பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக்குகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.