விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நெடுந்தொடர் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’.
தற்போது அந்தத் தொடர் முடிவடைந்திருக்கிறது. இந்த மாதம் 30-ம் தேதியிலிருந்து `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீசன் 2 ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தத் தொடரில் நடிகை ஹாசினி @ விலாசினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரிடம் இந்தத் தொடர் குறித்துப் பேசினோம்.

“ஜீ தமிழ் `தவமாய் தவமிருந்து’ சீரியல் எனக்குன்னு ஒரு பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. அந்தத் தொடர் முடியும்போது பலரும் உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்.. அடுத்து என்ன சீரியல் பண்ணப் போறீங்கன்னுலாம் கேட்டுட்டு இருந்தாங்க. `பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2′ ப்ரோமோ வந்ததும் பலரும் சந்தோஷப்பட்டு வாழ்த்தி நிறைய மெசேஜ் அனுப்பியிருந்தாங்க.
`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீசன் 2 சீரியல்னு சொன்னதும் எனக்கு பயங்கர ஹாப்பி ஆகிடுச்சு. அவங்க சொன்னதுமே நான் பண்றேன்னு சொல்லிட்டேன். என்ன கேரக்டர், எதுன்னுலாம் நான் யோசிக்கவே இல்ல. பிறகு, என்னோட கேரக்டர் பற்றி சொன்னதும் பயங்கர ஹாப்பி ஆகிட்டேன். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1-ன் தொடர்ச்சி இந்த சீசன் 2 கிடையாது. சரியா சொல்லணும்னா பாண்டியன் ஸ்டோர்ஸ் 1-க்கும், 2க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது மொத்தமா வேற கதை.

நிறைய பேர் என்கிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்ல வர்ற `கயல்’ கேரக்டர் தானே நீங்கன்னு கேட்குறாங்க. அதுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தத் தொடரில் பாண்டியனுக்கு மூணு பசங்க, ரெண்டு பொண்ணுங்க. நான் மூத்தப் பொண்ணா நடிக்கிறேன். இந்த சீரியலில் நிறைய பேர் நடிக்கிறாங்க. அதை சீரியல் வர்றப்ப நீங்களே பார்த்து தெரிஞ்சிப்பீங்க. மூணு தம்பிங்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆன அப்பா… பொண்ணுங்ககிட்ட பாசமான அப்பா. நிரோஷா மேமுக்கு பொண்ணா நடிக்கிறேன்னு சொன்னதும் ரொம்ப ஷாக் ஆக இருந்தது. அவங்ககிட்ட ஆரம்பிச்சு செட்ல எல்லார்கிட்டேயும் ஜாலியா பேச ஆரம்பிச்சிட்டேன்.
இந்த சீரியலில் என்னுடைய காஸ்டியூம், ஜூவல்லரி கலெக்ஷன்ஸ்ல கொஞ்சம் கவனம் செலுத்துறேன். அதே மாதிரி, காரைக்குடி பக்கம் நடக்கிற மாதிரியான கதை என்பதால் என்னென்ன வார்த்தைகளை எப்படி பயன்படுத்தணும்னு கவனம் செலுத்துறேன். எனக்கு செளமியா தான் டப்பிங் பேசுறாங்க. இந்தக் கேரக்டருக்காக ஒவ்வொன்னும் பார்த்துப் பார்த்து பண்றேன்.

`தவமாய் தவமிருந்து’ சீரியலில் எமோஷனல் ஆன சீன் வரும். அப்பா – பொண்ணு பாண்டிங் பலருக்கும் பிடிச்சிருந்தது. நிறைய பேர் நாங்களும் எமோஷனல் ஆகிட்டோம்னுலாம் மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. அதே மாதிரி இந்தக் கேரக்டரும் நிச்சயம் மக்கள் மனசுல பதியும்னு நம்புறேன். இந்தத் தொடரில் எனக்கு அழகான தமிழ்ப் பெயர் வச்சிருக்காங்க. அது என்னன்னு சீரியல் பார்த்து தெரிஞ்சிக்கோங்க! இந்தக் கேரக்டர் அப்பா மேல பாசமா இருக்கிற ஒரு பொண்ணு. எப்பவும் எதுக்காகவும் தம்பியையும், குடும்பத்தையும் விட்டுக் கொடுக்காத பொண்ணு!” என்றவருக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.